சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில் வாகனத்தார்…

srithiranயாழ்பாணத்தில் இருந்து ” சிரித்திரன்” எண்டு ஒரு நகைசுவை பத்திரிகை வந்தது பலருக்கு தெரியும் ,ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில், அதை இலங்கை தீவில் பல அறிவு சார்ந்த விசியன்களில் முன்னோடிகள் அதிகம் வசித்த வடமராசியின் , கரவெட்டியில் பிறந்த ,சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம், ” செய்தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம்’ என்ற சிந்தனைக் கொள்கையுடன் பல வருடம் வெளியிட்டார் .

!அறுபதுக்களில் ஆரம்பிக்கப்பட்ட “சிரித்திரன்” சஞ்சிகை திரு சி சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை சுமார் 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்திருக்கு என்கிறார்கள் , சிவஞானசுந்தரம் அவர்களின் தந்தை இலங்கையின் முதலாவது தபால் மாஅதிபர் திரு வி. கே. சிற்றம்பலம் என்கிறார்கள் . சுந்தரைக் அவரின் தனத்தை இந்தியாவுக்கு ஆர்கிடெக்சர் என்ற கட்டிடக்கலை படிக்க அனுப்ப , அவர் இந்தியாவின் ஹிந்து பத்திரிகையில் கார்டுநிஸ்ட் ஆக இருந் R K லக்மனின் , கார்டுனில் மயங்கி , இந்தியாவில் கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டுஇலங்கை வந்தாராம் .

அவர் முதலில் கொழும்பில் இருந்து வெளிவந்த தினகரனில் கார்டுநிஸ்ட் ஆக இருந்து , அதில் வெளிவந்துகொண்டிருந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றதால் , தானாகவே ஒரு பத்திரிகை ஆரம்பித்து இருக்கிறார் . அவரது கார்ட்டூன் நாயகர்களனைவரும் சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மெயில் வாகனத்தா ர் , எல்லாரும் அவர் பிறந்து வளர்ந்த சொந்தக்கிராமமான கரவெட்டியில் அவர் அன்றாடம் சந்திக்கும் உண்மைப்பாத்திரங்கள் என்று சிரித்திரனில் எழுதியிருக்கிறார் !

அறுபதுக்களில் முதன் முதலில் கொழும்பில் கொட்டாஞ்சேனையில் உ பல கஷ்டங்களுக்கு மத்தியில் சிரித்திரனை வெளியிட ஆரம்பித்தார். அச்சடித்த சஞ்சிகைகளை தனியே வீதி வீதியாகக் கொண்டு சென்று கடைகள் தோறும் போடுவாராம். தமிழ்நாட்டு பத்திரிகைகள் குமுதம், கல்கண்டு, விகடன் எல்லாம் வெளிவந்த காலத்தில் சிரித்திரன் கொஞ்சம் அவைகளுக்கு போட்டியாகவே உள்ளுரில் வெளிவந்து இருக்குது . பல வருடங்கள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டப்பட்டு ” சிரித்திரன் ” அதன் பின யாழ்ப்பான அடையாளத்துடன் வெளிவந்திருக்கு !

சிரித்திரனை அதன் பொருளாதார சிக்கல் நேரங்களில் கைகொடுத்தது மில்க்வைற் சவுக்கரக் கொம்பனி நிறுவனம் நடத்திய க கனகராசா அவர்கள் ! மில்க்வைற் கனகராசா : “சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள் ஒரு நிறைமனிதன். தனது அறிவையோ ஆற்றலையோ அவர் குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறுக்கி விடவில்லை. அவர் நல்லவற்றைச் சிந்தித்தார். நல்லவற்றைச் செய்தார். நகைச்சுவை மூலம் நல்லவற்றை மக்கள் மனத்தில் ஆழப்பதிய வைத்தார். எமது பணிகளில் எம்முடன் இணைந்து வாழவைக்கும் வன்னிப் பிரதேசத்தில் பனம் விதைகளை விதைப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் கொண்ட பெருமிதமும் எமது நெஞ்சில் என்றுமே பசுமையாக நிறைந்து நிற்கும். இன்று நிமிர்ந்து நிற்கும் மரங்கள் சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களையும் மறக்க மாட்டா.” என்று சொல்லியிருகுறார் !

சிரித்திரனில் ஆரம்பகால எழுத்தாளர்கள் தர்மு (சுவைத்திரள் ஆசிரியர்),அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் , யாழ் நங்கை, காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த மாத்திரைக் கதைகள் அதில்வர குடாரப்பூர் சிவா “நடுநிசி” என்ற மர்மக்கதையை எழுதியிருகுறார் . மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் . மலையகப் படைப்பாளி ராகுலனின் “ஒய்யப்பங் கங்காணி” . செங்கை ஆழியானின்” ஆச்சி பயணம் போகிறாள்” , ” கொத்தியின் காதல்” ,, எல்லாம் அதில வந்திருக்கு ,இலங்கையில் புதுக்கவிதையை அறிமுகப் படுத்தி ஜனரஞ்சகப் படுத்திய பெருமை நிச்சயம் சிரித்திரனுக்குண்டு.

ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் ,கவிதைகளுடன் அதற்கேற்ப சிறிய படங்களும் வரைந்து திக்குவல்லை கமால், ராதேயன், பூநகரி மரியதாஸ் (தனுஜா) இப்படிப் பலர் சிரித்திரனில் புதுக்கவிதைகள் எழுதியிருகுறார்கலாம்! சிரித்திரன் சுந்தரின் மனைவி தான் அவரோட முதல் வாசகி, ரசிகை , ஓர் ஆழமான ரசிகை. அவருடைய ஒத்துழைப்பும் பின்னணியும் சிரித்திரன் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகித்தது என்று சொல்லிருகுறார் திக்குவல்லை கமால். அதிகம் பேசாது நிறையச் சாதித்தவர் சுந்தர். தனது சித்திரங்களை கார்ட்டூன் என்று அழைப்பதில்லை, அவற்றைக் கருத்தூண்கள் என்றே அழைத்தார். அவர் நல்லவற்றைச் செய்து அவற்றை நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் ஆழப்பதிய வைத்தார்.

சிரித்திரனில் வந்த பகிடிகள் எப்பவுமே யாழ்ப்பான மக்களின் பழக்க வழக்கங்களை கிண்டல் செய்வதாக இருந்தது ,உதாரணத்துக்கு .- ஒரு கிடாய் ஆட்டினைத் தீபாவளிக்காக வெட்டுவதற்குக் காவல் நிற்கிறார்கள். ஆடு சொல்கிறது: “எல்லோரும் இன்புற்று இருப்பதேயன்றி வேறொன்று அறியேன் பராபரமே” என்கின்றது. இன்னொரு பகிடியில் பாம்புக்குட்டியொன்று தன் அம்மாவிடம் கேட்கிறது: “அம்மா! அப்பா எப்படி செத்துப் போனார்?”, அதற்கு அம்மா பாம்பு இப்படிப் பதில் கூறுகிறது: “கள்ள பெட்டிஷன் எழுதுகிற ஒருவரைக் கொத்தி, உடம்பில் விஷம் ஏறி உன் அப்பா செத்துப் போனார்.”ஒரு மத்தியதர வர்க்கத்தின் யாழ்ப்பான படிச்சாதான் வாழ்கை மெண்டாலிடியை ,இப்படி “, ஒருத்தி மயக்க நிலையில் கிடக்கின்றாள். எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் மயக்கம் தெளிந்த பாடில்லை. வேறொருத்தி வந்து காதில் ஏதோ சொல்கிறாள். உடனே மயக்கம் தெளிந்து விடுகின்றது. “அவள் காதில் என்ன சொன்னாள்? “உனது புருஷன் அக்கவுண்டன்ற் சோதனை பாஸ்”.2 எண்டு கிண்டல் அடித்து இருக்குறார் !

சுந்தரின் மகுடியார் கேள்வி -பதிலில் எப்பவுமே நிறைய சிந்திக்கும் விசியம் இருக்கும் , அந்த கேள்விகளை சுந்தரே எழுதி பதிலையும் அவரே எழுதுவார் எண்டு அந்த நாடகளில் ஒரு செய்தி இருந்தது, எப்படியோ அவரின் ஒரு கேள்வியும் பதிலும் இப்பவும் எனக்கு நினைவு இருக்கு ! மகுடியாரிடம் ஒருவர் கேட்பார் ” மனிதனின் அறிவு எதுக்குப் பயன்படுகுது எண்டு ? ” அதுக்கு மகுடியார் சொல்லுவார் ” மாட்டுகுக் குறி சுடப் பயன்படுகுது ” எண்டு !

சிரித்திரன் சுந்தர் உருவாகிய ” மெயில்வாகனத்தார்” வடமராட்சிப் பேச்சு வழக்கில் பல விசியங்கள் சொல்லுவார் ! அதில ஒன்று “தாய் மூன்று மிளரும், தண்ணீருமாய் ஊரில் கந்தசஷ்டி பிடிக்க மகன் 304லும் தண்ணியுமாய் கொழும்பில் இருக்க”. எண்டு எழுதி இருப்பார் ,,,ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் சிறிமாவோ அம்மையார் காலத்தில் சீனிக்கு ரேஷன் இருந்த சமயத்தில் சுந்தர் வரைந்த கார்ட்டூன் ஒன்று. எறும்பு அணியொன்றுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த மைனர் மச்சான் சொல்கிறான், “எறும்புகளுக்குத்தான் சீனி இருக்குமிடம் தெரியும்.” எண்டு ஒரு காமடி அதில் வந்தது !

ஒரு நாட்டின் அறிவு வீச்சு , அந்த நாட்டில் இருந்து வெளிவரும் நகைசுவைப் பத்திரிகைகளின் எண்ணிக்கையில் தங்கி உள்ளது என்கிறார்கள் அறிவாளிகள் ! ஈழத்து நகைச்சுவை இலக்கியத் துறையில் சிரித்திரன் ஒரு கலாசார அடையாமா இருந்தது , அது மறைந்த பின் ,சுந்தருக்குப் பிறகு யாருமே அப்படி ஒரு பத்திரிகை கொண்டுவரவில்லை எண்டு நினைகேறேன் ! ஒரு இழப்புதான் !

Via: https://www.facebook.com/arasan.eliyathamby

Tags: , ,

Leave a Reply