போர் நடைபெற்ற காலத்தை விட மக்கள் தற்பொழுது பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐ.தே.கவின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஐ.தே.கவின் 55ஆவது வருடந்த தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த 2014 ஆம் ஆண்டில் தேர்தல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக நாம் அனைவரும் போராட வேண்டும்.
அத்துடன் தேவை ஏற்பட்டால் தேர்தலை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடவும் தயாராக இருக்கின்றோம்.
எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். போர் நடைபெற்ற காலத்தை விட மக்கள் தற்பொழுது பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
நாட்டில் வாழும் ஒரு வீதமானவர்களே சுகபோங்களை அனுபவித்து வருவதுடன் 99 வீதமானவர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
எனினும் துயரத்தில் வாழ்ந்து வரும் மக்களை அதிவேக நெடுஞ்சாலையில் செல்லுமாறு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கூறுவதாகவே அவரது செயற்பாடுகள் அமைகிறது என்றார்.
















