மகேஷ்பாபு நடித்த ‘ஒன் மீ நினோக்டின்’ தெலுங்கு படம் வெளியிட தயாராகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டுக்கான போஸ்டர்கள் ஐதராபாத்தில் ஒட்டப்பட்டு இருந்தன.
அந்த போஸ்டரில் மகேஷ்பாபுவின் காலடி பின்னால் நடிகை தரையில் ஊர்ந்து போவது போல் இருந்தது. பெண்களை கேவலப்படுத்துவது போல் இந்த போஸ்டர் உள்ளது என்று டுவிட்டரில் சமந்தா கண்டித்துள்ளார். மேலும் பிற்போக்கு தனமான சிந்தனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சமந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் இருந்து சமந்தாவை வெளியேற்ற வேண்டும் என்று டுவிட்டர்களில் வற்புறுத்தி வருகின்றனர்.
இப்பிரச்சினையில் சமந்தாவுக்கு ஆதரவாக சித்தார்த் பேசியுள்ளார்.
கருத்து சுதந்திரம் இருப்பதற்காக தீவிரமாக பேசக் கூடாது. அப்படி கூறினால் தீவிரவாதிகள் போல் ஆகிவிடுவீர்கள். முதலில் நீங்கள்தான் வெளியேற வேண்டும் என்றும் மகேஷ்பாபு ரசிகர்களை சித்தார்த் கண்டித்துள்ளார்.
Via: www.tamildaily.com
















