பொதுவான ஓர் கூட்டமைப்பை அமைத்து அதன் ஊடாக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது. எதிர்வரும் பொது அல்லது மாகாணசபைத் தேர்தலில் சில கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இறுதி தேர்தல் வியூகம் பற்றி தீர்மானிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
















