இளம் பெண்ணை பேஸ்புக்கில் மனைவியா சித்தரித்த நபர் கைது

facebook3திருமணம் நிச்சயமான இளம்பெண்ணை பேஸ்புக்கில், மனைவியாக சித்தரித்த எம்.பி.ஏ., பட்டதாரியை பொலிசார் கைது செய்தனர்.

திருப்பூர், போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் 25; எம்.பி.ஏ., பட்டதாரி.

தனியார் தொலைபேசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

குப்பாண்டம் பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமானது; ஆத்திரமடைந்த, யோகேஸ்வரன் பேஸ்புக்கில் பெண்ணை தன் மனைவியாக சித்தரித்து, தகவல் வெளியிட்டார்.

இதுகுறித்து பொலிசார், வழக்குப் பதிந்து பெண் வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: , ,

Leave a Reply