மகனின் சாம்பலில் செயற்கை வைரம் செய்து பாதுகாக்கும் பாசக்கார தந்தை

vairamஇத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள டிரிவிசன் என்ற நகரைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய தந்தைக்கு 20 வயதில் மகன் ஒருவர் இருந்தார். தனது மகன் மீது அவர் அளவில்லாத பாசம் வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் அவரது மகன் கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். இதனால் அவரது தந்தை மிகவும் துயரம் அடைந்தார்.

தனது மகனின் இறுதி சடங்கை செய்து அதன் சாம்பலை சேகரித்து வைத்திருந்தார். இளவயதில் மகன் இறந்த துக்கத்தை அவரால் மறக்க முடியவில்லை.

தனது மகன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினார் அந்த பாசக்கார தந்தை.

இதனையடுத்து சுவிட்சர்லாந்தில் செயற்கை வைரம் செய்யும் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தை கண்டார்.

இதனையடுத்து தனது மகனின் சாம்பலை அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து அதனை செயற்கை வைரமாக மாற்றி தரும்படி கேட்டுக் கொண்டார்.

அந்த நிறுவனமும் சுமார் 8 மாத பரிசோதனை முயற்சிக்கு பிறகு அதனை செயற்கை வைரமாக மாற்றி அந்த பாசக்கார இத்தாலி தந்தைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்காக ரூ.11 லட்சம் செலவானது. இப்போது அந்த செயற்கை வைரத்தை தனது மகனின் நினைவாக வைத்து பாதுகாத்து வருகிறார் பாசக்கார இத்தாலி தந்தை.

Tags: ,

Leave a Reply