சினிமா இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாருக்கு பாராட்டு விழா

ksravikumarமுத்து, படையப்பா, அவ்வை சண்முகி, தசாவதாரம், நாட்டாமை, நட்புக்காக உள்பட ஏராளமான படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார். இவர் திரையுலகுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு ஜனவரி 4ஆம் திகதி, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெறவிருக்கிறது

விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு கே.எஸ்.ரவிகுமாருக்கு நினைவு பரிசை வழங்கவுள்ளார். சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்திக், விஜய், அஜீத்குமார், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, விஷால், ஜீவா, சிலம்பரசன், தனுஷ் உள்பட பிரபல கதாநாயகர்கள்–கதாநாயகிகள் அனைவரும் விழாவில் கலந்துகொள்ள உள்ளார்கள்.

கே.எஸ்.ரவிகுமாரின் படங்களுக்கு இசையமைத்த பல இசையமைப்பாளர்கள் பங்குபெறும் இசை நிகழ்ச்சியும், நடிகர்–நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

விழாவுக்கான ஏற்பாடுகளை நடிகர் ரமேஷ்கண்ணா, பட அதிபர்கள் சித்ரா லட்சுமணன், பி.எல்.தேனப்பன், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, சந்தானபாரதி, ஈ.ராம்தாஸ், ரங்கநாதன், ஸ்டண்ட் மாஸ்டர், கனல் கண்ணன் ஆகியோர் மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags: , ,

Leave a Reply