இலங்கையில் நபரொருவர் வருடமொன்றுக்கு இரண்டு கிலோ 300 கிராம் மிளகாயை உட்கொள்வதாகவும் மிளகாயில் போஷாக்கு குணம் இல்லாதபோதும் அதன் உறைப்புத் தன்மைக்காக மிளகாயை சேர்த்து சமைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவிக்கின்றார்.
மிளகாய் உற்பத்தியைப் பெருக்குவதற்காக விவசாய திணைக்களத்தைச் சேர்ந்த 3000 அதிகாரிகள் கலந்துகொண்ட கருத்தரங்கில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இக்கருத்தரங்கு கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி பண்ணையில் நடைபெற்றது.
பாவனையாளர்களின் மிளகாய் தேவையை பூர்த்தி செய்ய வருடமொன்றுக்கு 42,782 மெட்ரிக் தொன் மிளகாய் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
















