சர்வதேச வாக்கு வங்கியின் வீழ்ச்சியானது இலங்கைக்கு பாராதூரமான ஆபத்து

dayanஜெனிவாவில் இன்னும் 60 நாட்களில் அதாவது எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாக போவது இலங்கையின் சர்வதேச தொடர்புகள் சம்பந்தமான தீர்க்கமான போராட்டம் என முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச வாக்கு வங்கியை இழந்த நாடாக இந்த போராட்டத்திற்குள் நுழையும் இலங்கை மிகவும் பாரதூரமான சிரமங்களை எதிர்நோக்க வாய்ப்புள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை தேசிய ரீதியிலான விசாரணைகளை ஆரம்பிக்காவிட்டால், சர்வதேச விசாரணை ஒன்றை தொடங்குவதற்கு முன்னிலையை எடுத்து செயற்பட போவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வெளியிட்ட கருத்து மிகவும் பாரதூரமான எச்சரிக்கையாகும் என்பதே பலரது கருத்தாகும்.

டேவிட் கமரூன் பற்றி நாம் எதனை கூறினாலும் அவர் பிரித்தானிய பிரதமர்.

பிரித்தானிய பிரதமர் என்பவர் சில நாடுகளில் உள்ள பிரதமர்களை போன்று தமது அதிகாரிகளை கையெழுத்திடும் கடிதங்கள் பற்றிய அறியாத பிரதமர்களை போன்ற பிரதமரல்ல.

டேவிட் கமரூன் கொழும்பிலும் பிரித்தானிய நாடாளுமன்றத்திலுமே இலங்கை சம்பந்தமான இந்த இராஜதந்திர அச்சுறுத்தலை விடுத்தார். இது கேலியான விடயமல்ல. மார்ச் மாதத்திற்குள் மறைந்து போய்விடும் அச்சுறுத்தலும் அல்ல.

இராஜதந்திர ரீதியில் பிரித்தானிய இலங்கைக்கு விடுத்துள்ள முதல் சவால் இதுவல்ல. இதற்கு முன்னர் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் தலைமையில் ஜெனிவாவில் யோசனை ஒன்றை கொண்டு வர முயற்சித்த போது இலங்கை அதனை தோற்கடித்தது.

எனினும் இந்த செயற்பாட்டில் பெற்ற பாடத்தை இலங்கை அரசாங்கத்தை விட பிரித்தானியா கற்றுள்ளது காணக் கூடிய விடயமாக உள்ளது.

பிரித்தானியா என்பது அமெரிக்காவுடன் மிக நெருக்கத்தை கொண்டுள்ள நாடு. நெல்சன் மண்டேலாவின் மரண சடங்கில் டேவிட் கமரூன், பராக் ஒபாமா ஆகியோர் டென்மார்க் பிரதமர் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் அவர்களின் தனிப்பட்ட நட்பை தெளிவாக காட்டியது.

டேவிட் கமருன் இலங்கைக்கு விடுத்துள்ள இந்த சவாலுக்கு அமெரிக்க முழுமையான ஆதரவை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இராஜதந்திர தாக்குதல்களை பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்னிலையில் இருந்து ஆரம்பித்தன. அன்று அமெரிக்க பின்னால் இருந்தது. 2011 ஆம் ஆண்டு இந்த விடயத்தில் கனடா முன்னலையில் இருந்தது. 2012 மற்றும்2013 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா முன்னிலையை கொண்டு செயற்பட்டது.

2009 ஆம் ஆண்டுக்கு பின் 5 வருடங்கள் கழிந்து இலங்கைக்கு எதிரான ராஜதந்திர தாக்குதலை தொடுக்க 2014 ஆம் ஆண்டில் மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது. பிரித்தானியாவை முன்னால் வைத்து விட்டு பின்னணியில் அமெரிக்கா இருக்கின்றது.

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆக்கிரமிப்பு ரீதியான சவால்களை தொடுத்துள்ளன. இதனை எதிர்நோக்க இலங்கை போதிய ஆயத்தங்களை செய்துள்ளதாக தெரியவில்லை.

ஜப்பான் இலங்கையின் நட்பு நாடாக இருந்த போதும் தனக்கு நெருக்கமான மூலோபாய நண்பனான அமெரிக்காவுக்கு எதிராக சென்று இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று எண்ண முடியாது.

ஜப்பான், இலங்கைக்கு சார்பாக தலையீடுகளை மேற்கொண்டு அமெரிக்காவின் கடுமையான தாக்குதலில் இருந்து இலங்கைக்கு ஓரளவு நிவாரணத்தை பெற்று தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தோன்றுகிறது.

இதற்காக செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பான யோசனைகளை ஏற்கனவே ஜப்பான், இலங்கைக்கு முன்வைத்துள்ளது.

ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூஷி அகாஷி இதனை நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு கூறியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வல்லரசு நாடுகள் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ள போகும் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என அவர் கூறியிருந்தார்.

2012 -2013 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட யோசனைகளையும் தாண்டிய யோசனை இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்த யோசனைகளின் முடிவுகள் கடுமையானதாகவும் பாரதுமானதாகவும் இருக்கும் எனவும் அகாஷி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பிரச்சினையை ஆரம்பத்திலேயே தீர்த்து கொள்வதற்கு இலங்கைக்கு இருக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுதான் என்பதை ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே அகாஷியின் இலங்கைக்கான இம்முறை விஜயம் அமைந்திருந்தது.

மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானகரமான மற்றும் கடுமையான நடவடிக்கை ஜெனிவாவில் எடுக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமாயின் சர்வதேச சமூகத்திற்குள் இலங்கைக்கு இருக்கும் நண்பர்களை அதிகரித்து அவர்களின் நம்பிக்கை உறுதிப்படுத்த இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகாஷி அறிவித்திருந்தார்.

அதேவேளை சீனா மற்றும் ரஷ்யாவின் நிலைமைகளை இலங்கை மிகவும் யதார்த்தமான வகையில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.

ரஷ்யாவும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்பது உண்மை. எனினும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு எதிராக சென்று, இந்நாடுகள் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும் நினைக்க முடியாது என தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply