பா.ஜ.க தனி ஈழத்தை வலியுறுத்துகிறது என்கிறார் தமிழருவி மணியன்:- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
பா.ஜ.காவின் எல்லாச் செயற்பாடுகளையும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பா.ஜ.கா தனி ஈழத்தையே தீர்வாக வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் எவரும் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை எனவும் அவர்கள் ஈழ இனப்படுகொலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முதுகின் பின்னாலிருந்து சௌகரியங்களை வழங்கியவர்கள் எனக் குற்றம் சாட்டினார்.
ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது காங்கிரஸ் இந்தியாவை ஆட்சி செய்தது என்று தெரிவித்த அவர் காங்கிரசும் அதற்கு உடந்தையாக இருந்தது என்றார். காங்கிரஸை வீழ்த்தவே பா.ஜ.காவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டார்.
பா.ஜா.கா. ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு என்று பா.ஜ.கா வலியுறுத்தி வந்துள்ளதாகவும் தமிழருவி மணியன் சுட்டிக்காட்டினார். தேர்தலில் பா.ஜ.கா இனப்பகைவரான சுப்பிரமணிய சுவாமியை எங்கு நிறுத்தினாலும் எதிர்க்கப் போகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
















