இலங்கைக்கு உயர் குழு அனுப்பவேண்டும் ஐ.நா.; உலகத் தமிழர் பேரவை மனு

un-flagஇலங்கை அரசின் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் ஐ.நாவின் உயர்மட்டப் பார்வையாளர் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி மனித உரிமைகள் சபையிடம் உலகத் தமிழர் பேரவை மனு ஒன்றைக் கையளிக்கவுள்ளது.

இந்தத் தகவலை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று “உதய’னிடம் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் நாளுக்கு நாள் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கை அரசினதும் அதன் படைகளினதும் அராஜகங்கள் தலை விரித்தாடுகின்றன.

இலங்கையின் உண்மை நிலைவரங்கள் வெளியுலகத்திற்குத் தெரிந்து விடும் என்ற அச்சத்தால் இலங்கைக்கு செல்லும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மஹிந்த அரசாலும் அதன் படைகளினாலும் விரட்டப்படுகின்றனர்; கைதுசெய்யப்படுகின்றனர்; நாடு கடத்தப்படுகின்றனர்.

இது ஐ.நாவில் ஏற்கனவே நிறைவேற்றபட்ட இரண்டு தீர்மானங்களையும் நிறைவேற்றாமல் காலத்தைக் கடத்திவரும் இலங்கை அரசுக்குத்தான் இறுதியில் பேராபத்தை ஏற்படுத்தும். இதை உணர்ந்தும் இலங்கை அரசு தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு வருகின்றது.

எனவே, இலங்கை அரசின் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் ஐ.நாவின் உயர்மட்ட பார்வையாளர் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் பேரவையிடம் உலகத் தமிழர் பேரமைப்பு மகஜர் ஒன்றைக் கையளிக்கவுள்ளது.

ஐ.நாவின் உயர்மட்ட பார்வையாளர் குழு இலங்கை சென்று வந்தால் தான் அங்குள்ள உண்மை நிலைவரங்களை மார்ச் மாதம் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் வெளியாகும். இலங்கை அரசின் அராஜகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் – என்றார்.

Tags: ,

Leave a Reply