மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்தி அரசு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று ஜே.வி.பி.வலியுறுத்தியுள்ளது.
மன்னார் போர் நடைபெற்ற பகுதி என்பதால் இது தொடர்பில் உண்மையைக் கண்டறிவது மிக அவசியம் என்று அக்கட்சியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க உதயனுக்குத் தெரிவித்தார்.
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதேவேளை, மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பிலும் இன்னும் விசாரணைகள் முடிவடையவில்லை. இந்நிலையில், மன்னாரிலும் இன்னுமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அதற்கான விசாரணைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.
















