பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் உருவான படங்களில், அனைத்து பாடல்களையும் எழுதி வந்தார் வைரமுத்து.
ஆனால், இளையராஜா, வைரமுத்துவுக்கு இடையிலான நட்பில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது.
அதன்பின் பிரிந்த அவர்கள், இப்போது வரை இணையவில்லை.
இருப்பினும், சமீபத்தில் இதயநோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பிய இளையராஜாவை, ´கங்காரு´ படத்தின் ஆடியோ விழாவில், வாழ்த்தி பேசினார் வைரமுத்து.
அப்போது, ´தமிழ் சினிமாவின் அடையாளமான ஆருயிர் நண்பர் இளையராஜா, நம் பாரம்பரிய மண்வாசனை இசையை, வெள்ளை மாளிகைக்கும், அப்பால் ஒலிக்க வைத்தவர்´ என்று அவரது பெருமைகளை மேடையில் கூறியதுடன், ´அவர் இன்னும், பல ஆண்டுகளுக்கு, நம் மண்வாசனை இசையை தந்து கொண்டேயிருக்க வேண்டும்´ என்றார்.
















