அரசாங்கம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது : விக்ரமபாகு கருணாரட்ண

vikramaஉள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைவதன் மூலம் அரசாங்கம் வீழ்ந்து வருவதை காண முடிவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதைப் பொருள், மது பெருமளவில் பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பிரதமர் கூட போதையாளராக மாற்றப்பட்டார்.

அத்துடன் அரசாங்கத்தின் பிரதானமான வருவாய் ஈட்டும் வழிமுறையாக கசினோ சூதாட்டம் மாறியுள்ளது. உலக முழுவதிலும் விலை மாதர்களை அழைத்து வந்து இலங்கையில் விபச்சாரம் செய்து வருகின்றனர். இனவாதம், மதவாதம், வன்முறை மற்றும் பொதுபலசேனா போன்ற அமைப்புகள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் இயங்கி வருபவை. இவர்கள் மூலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

இலங்கையின் கிறிஸ்தவ சங்கங்களின் குரல் ரோமில் உள்ள போப்பாண்டவர் வரை சென்றுள்ளது. ஏனைய மதங்களின் வணக்கஸ்தலங்களை தாக்குமாறு புத்த பகவான் என்றும் போதித்ததில்லை. இலங்கையில் நடைபெறும் சில சம்பவங்களால் புத்த மதம் மிலேச்சத்தனமான மதம் என சில வெளிநாட்டினர் கருதுகின்றனர் என்றார்.

Tags: , ,

Leave a Reply