இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் அதிகளவிலான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிரானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 7ஆயிரத்து 765 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
அவற்றில் 80 வீதமான முறைப்பாடுகள் விசாரணைகள் நடத்தி பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
அதில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் விசாரணை செய்யாமை, துன்புறுத்தல்கள்,சட்டவிரோத கைது, தடுத்து வைத்தல்கள் போன்றன தொடர்பிலேயே அமைந்துள்ளன.
அதற்கு அடுத்தபடியாக கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















