விட்டுக்கொடுப்புகளின் மூலமே இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய இலங்கை மீனவர்களது பிரச்சினை தொடர்ந்து கொண்டு இருக்கின்ற நிலையில் இந்த கருத்தினை இந்தியா முன்வைத்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள இரண்டு நாட்டு மீனவர்கள் சந்திப்பின் போது இரண்டு தரப்பும் இது தொடர்பில் தீவிரமாக ஆராய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் பி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் நடைபெறவுள்ள சந்திப்பின்போது இந்தப்பிரச்சினைக்கு தீர்வுக்காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயத்தில் தமிழக அரசாங்கம் உரிய ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் குற்றம் சுமத்தினார்.
எனினும் இதற்காக கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்டவர்கள் செல்லவுள்ளதுடன் இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை என்றும் கூறப்பட்டது.
இருப்பினும் இந்திய மீனவர்களால் அதிகம் பாதிக்கப்படும் வடக்கு மாகாணம் சார்பில் குறித்த பேச்சுவார்த்தைக்கு இதுவரை எவருக்கும் அறிவிப்புக்கள் கிடைக்கவில்லை என வடக்கு மாகாண சங்க பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















