இங்கிலாந்தில் சிறப்புற நடைபெற்ற கனடா உதயனின் “இதுவரை..” நூல் வெளியீட்டு விழா

ithuvarai2கனடா உதயன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் தலையங்கமான கதிரோட்டங்கள் பலவற்றின் தொகுப்பாக வெளிவந்துள்ள “இதுவரை..” என்னும் நூலின் வெளியீட்டு விழா கடந்த 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் உள்ள தெற்கு விம்பில்டன் சமூக முன்னேற்றக்கழக மண்டபத்தில் நடைபெற்றது.
ithuvarai1
திருவாளர்கள் ஸ்ரீபதி சிவனடியான் மற்றும் “தமிழினி” குலேந்திரன் ஆகியோரின் விடா முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி வெளியீட்டு விழாவிற்கு பேராசிரியர் கோபன் மகாதேவா தலைமை தாங்கி தனது பணியைச் சிறப்பாக ஆற்றினார். மேலும் அறிமுக உரையை ஐபிசி வானொலி நிலைய நிகழ்ச்சித் தயாரி;ப்பாளர் திரு குணாவும் வெளியீட்டு உரையை திரு கந்தசாமி மனோகரனும்ää வாழ்த்துரையை ஒலிபரப்பாளர் திரு நடா மோகனும் மதிப்புரைகளை திருவாளர்கள் தமிழினி குலேந்திரனும் கோவிலூர் செல்;வராஜனும் ஆற்ற ஆய்வுரையை பிரபல எழுத்தாளர் முல்லை அமுதன் ஆற்றினார்.

தமிழகத்தின்; நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவரான திரு பழ.நெடுமாறன் அவர்களின் முன்னுரையுடன் வெளியாகியுள்ள மேற்படி நூலை இலண்டன் மாநகரில் வெளியிடும் சந்தர்ப்பம் இங்கிலாந்து வாழ் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது என்று வாழ்த்துரை வழங்கிய திரு நடா மோகன் தெரிவித்தார்.

ஆய்வுரை செய்த முல்லை அமுதன் தனது உரையில்

“கடந்த 18 வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கும்; கனடா உதயன் பத்திரிகை பல சவால்களை சந்தித்திருக்கும் என்பதில் ஐயமேயில்லை. அவ்வாறிருந்தும் அதன் பிரதம ஆசிரியரின் எண்ணக்கருத்தாக வெளிவரும் இந்த கதிரோட்டங்கள் மிகவும் கூர்மையானவையாக உள்ளன. தனது செய்தியில் பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் படி இந்த கதி;ரோட்டங்கள் ஏவுகணைகளுக்கு நிகரானவை என்பது உண்மைதான். கத்தியில் மேல் நடப்பது போலவும் முள்ளின் மேல் நின்று நர்த்தனம் ஆடும் நர்த்தகி போன்றும் உதயன் ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் படைத்துள்ள இந்த நூல் காலத்தின் தேவையென்றே நான் கருதுகின்றேன்.” என்றார்.

விழாவின் சபையில் பல முக்கியமானவர்களும் கலந்து கொண்டார்கள். முன்னாள் போராளி திரு சத்தியசீலன் உட்பட பலர் கலந்து கொண்டது இந்த விழாவிற்கு ஒரு சிறப்பாக இருந்தது.

இறுதியில் விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு ஸ்ரீபதி சிவனடியான் அவர்கள் நன்றியுரை கூறினார். அனைவரும் நூலின் பிரதிகளை வாங்கிச் சென்றனர்.

Leave a Reply