ஹாலிவுட் நடிகை Jessica Parker கடந்த2008ஆம் ஆண்டு தனது கணவர் Mathew Broderic சேர்ந்து அளித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தான் சிறுவயதில் இருந்தே புகைபிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்ததாகவும் கணவரின் அறிவுரை காரணமாக புகைபிடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டதாகவும் கூறியிருந்தார். அதுமுதல் ஆறு வருடங்களாக அவர் இதுவரை சிகரெட் பிடித்ததாக செய்திகள் வெளிவரவில்லை.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ரசிகை Jessica Parker சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு அவர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று என கேள்வி கேட்டிருந்தார். அதில் பல ஃபேஸ்புக் பயனாளிகள் Jessica Parker எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் Jessica Parkerஉதவியாளர் இதுகுறித்து கூறும்போது, Jessica Parker புகைப்படைத்தை யாரோ மார்பிங் செய்து கிசுகிசுவை கிளப்பியுள்ளார்கள். அவர் சிகரெட் பழக்கத்தை விட்டு ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. எனவே இது ஒரு பொய்யான,இட்டுக்கட்டப்பட்ட வதந்தி என கூறியுள்ளார்.
ஃபேஸ்புக்கில் வெளியான இந்த கிசுகிசுதான் ஹாலிவுட்டில் தற்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு. இந்த கிசுகிசு எந்தளவுக்கு உண்மை எனபது Jessica Parkerமனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
















