முதல்வராகும் எண்ணம் இல்லை – ஓ. பன்னீர்செல்வம்

ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு முதல்வராகும் இழிவான எண்ணம் தனக்கு எல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்தாவது,

‘டி. டி. வி. தினகரன் ஒரு புது பிரச்சினையை தாமாகவே சிந்தித்து குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். அதை முதலில் தங்க தமிழ்செல்வன் மூலம் சொல்ல வைத்து அவரும் அதே கருத்தை தொடர்ந்திருக்கிறார்.

ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு முதல்வராகும் இழிவான எண்ணம் எனக்கு தேவையில்லை. மூன்று முறை முதல்வராக இருந்திருக்கிறேன். ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வராக இருந்தேன். சசிகலா முதல்வராக விரும்புவதாக கூறிய போது வேண்டாம் என்றேன். பா.ஜ.க.வுடன் சேர்ந்திருந்தால் முதல்வராக தொடர்ந்து இருப்பேன்.

நான் தர்மயுத்தம் நடத்தியபோது, முதல்வருக்கும் தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சி கவிழுமா..? என்ற நிலைக்கு சென்று கொண்டிருந்தது.

இந்த நிலை நீடிக்கக்கூடாது என்று எண்ணினேன். அப்போது இருவருக்கும் பொதுவான நண்பரின் தொடர் வற்புறுத்தலாலேயே இந்த சந்திப்பு நண்பரின் வீட்டில் பதினைந்து நிமிடங்கள் நடந்தது. தினகரன் மனம் திருந்தி பேச வருகிறார் என்று நினைத்தேன்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து இறக்கிவிட்டு தான் முதல்வராக வரவேண்டுமென்ற டி. டி. வி. தினகரன் பேசினார். இந்த சந்திப்பு கடந்த ஆண்டு ஜுலை மாதம் 12 ஆம் திகதியன்று நடைபெற்றது. சந்திப்பை ஏற்பாடு செய்த நண்பர் சில நாள் கழித்து என்னைத் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார்.

கடந்த1996 ஆம் ஆண்டில் பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்தேன். அப்போது நெல்லையில் வீர வரலாறு வெற்றி மாநாட்டிற்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டிற்காக நிதியை திரட்டி, நானும், அப்போதைய தேனி மாவட்ட செயலாளராக இருந்த சையத் கானும் 1998 ஆம் ஆண்டில் ஜெயலலிதாவைச் சந்தித்து நேரில் வழங்கினோம். எனவே ஜெயலலிதாவிடம் என்னை அறிமுகப்படுத்தியதாக தினகரன் தெரிவித்தது பொய்.’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!