பிரித்தானியப் பிரதமர் யாழ் சென்றது லைக்கா மோபைல் நிறுவனத்தால் !

Subaskaran-Allirajahபிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ் வருகைக்கு, லைக்கா மோபைல் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களே பின்னணியில் இருந்ததாக கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் லைக்கா மோபைல் நிறுவனமானது, ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சிக்கு நன்கொடை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் 2ம் இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதன் காரணமாகவே டேவிட் கமரூன் யாழ் சென்றார் என்று, இலங்கையில் ஆழும் கட்சியின் சார்பு ஊடகமான “டெய்லி நியூஸ்” சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

25.12.2013 அன்று “டெய்லி நியூஸ்” செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

2013ம் ஆண்டு லைக்கா மோபைல் நிறுவனம் ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சிக்கு, பல ஆயிரம் பவுண்டுகளை நன்கொடையாக வழங்கியதாகவும், பின்னர் காமன் வெலத் மாநாட்டிற்கு கமரூன் இலங்கை சென்றவேளை லைக்கா அவர் யாழ் செல்லா லைக்கா மோபைல் நிறுவனமே வழிகளை ஏற்படுத்திக்கொடுத்ததாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. தற்போது லைக்கா மோபைல் நிறுவனம், இலங்கையில் ஞானம் அறக்கட்டளை என்னும் அமைப்பை ஸ்தாபித்துள்ளதோடு, போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கான ஆதரவையும் நல்கி வருகிறது என்று அறியப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply