பிழையான தரவுகளுடன் உள்ள அடையாள அட்டைகள் நாட்டில் பாவனையில் உள்ளதனால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நாட்டில் சுமார் 150,000 அடையாள அட்டைகள் பிழையான தரவுகளை கொண்டிருக்கின்றன. இதன்காரணமாக இந்த அடையாள அட்டைகளை கொண்டிருப்போர் வங்கிக்கடன் உட்பட்ட பல விடயங்களில் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தப்படுமானால் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் மனித வலுக்கள் காரணமாகவே இவ்வாறான தவறுகள் ஏற்படுகின்றது. எனினும் விரைவில் அடையாள அட்டை தயாரிப்புக்கள் யாவும் கணணி மயப்படுத்தப்படவுள்ளது என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
















