பல்வேறு நெருக்கடிகளுடன் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபையின் கடந்த வருடத்துக்கான இறுதிக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது அனைத்து உறுப்பினர்களின் உதவியுடன் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்புக் கோரும் மனு ஒன்று புதுவருட தினத்தில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 30 வருடகால போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதும், அதனால் எழுந்த விளைவுகள் நீண்டுகொண்டே செல்கின்றன. குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.
அரசியல் கைதிகள் பல வருடங்களாக சிறை வைக் கப்பட்டிருப்பதனால், அவர் களுக்குள்ளும், அவர்களின் குடும்பத்தினருக்குள்ளும் மிக மோசமான பாதிப்புக்களை அவதானிக்க முடிகிறது.
உளத்தாக்கங்கள், பொருளாதார பாதிப்புக்கள், வறுமை, கல்வி கற்க முடியாமை, கலாசார பாதிப்புக்கள் என்ற பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால் சமூகக் கட்டமைப்பின் பிரதான அம்சமான “குடும்பங்கள்’ சிதை வடைந்து பெரும் விளைவுகள் தோன்றுகிறது.
முன்னாள் போராளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். சமூக மயப்படுத் தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களால் நாட்டை அச்சுறுத்தும் வகையிலான எந்தப் பிரதிபலிப்புக்களும் இதுவரை எழுவில்லை.
போருக்குப் பின்னர் வன்முறைச் சிந்தனைக ளுக்கோ செயற்பாடுகளுக்கோ எமது இளைஞர், யுவதிகள் தயாரில்லை. இந்த நிலையில், இனங்களுக் கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையைக் கட்டியயழுப்புவதற்கும், ஒரு நல்ல சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டிருப்பது இவற்றுக்கு சாத்தியமாகாததே. எனவே போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு எதிர்வரும் மே 18ஆம் திகதி 5 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் அதற்கு முன்பதாக அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















