ஜில்லா படத்தை தியேட்டரில் பார்க்காமல் திருட்டு வி.சி.டி.யில் மட்டும் பாருங்க..! – குடிபோதையில் உளறிக்கொட்டிய ஜீவா..!

jeeva2பிறந்தநாள் அன்று நாலு பேருக்கு தையல் மிஷின் கொடுத்தால் அல்லது கொடுப்பதுபோல் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தால், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகிவிடலாம்..!

– இப்படி எந்த சாத்தான் நடிகர் ஜீவாவின் காதில் வேதம் ஓதியது என்று தெரியவில்லை.

அதை உண்மை என நம்பி, செயலில் இறங்கிவிட்டார் ஜீவா.

நேற்று (04.01.2014) ஜீவாவுக்கு பிறந்தநாள்…!

சும்மா சரக்கடித்து, கேக் வெட்டினால் கிக் இருக்காதே..! நாலு பத்திரிகையில் நியூஸ் வந்தால்தானே நடிகனுக்கு கெத்து? எனவே, நாலு பேருக்கு தையல் மிஷின் கொடுப்பதுபோல் நலத்திட்டவிழா நாடகத்தை அரங்கேற்றி, அதை வைத்து பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பக்காவாய் ஏற்பாடு செய்திருந்தார் ஜீவா.

நலத்திட்ட காமெடி நடந்து முடிந்ததும் பேச ஆரம்பித்தபோது,

”ஜில்லா படத்தை என் அப்பா உடன் சேர்ந்து நானும் தயாரித்திருக்கிறேன். இந்தப் படம் 10 ஆம்தேதி ரிலீஸ் ஆகிறது. ரசிகர்கள் அனைவரும் ‘ஜில்லா’ படத்தை தியேட்டரில் பார்க்காமல் திருட்டு வி.சி.டி.யில் மட்டும் பாருங்க..!” என்றார் கூலாக.

என்னாச்சு….ஜீவாவுக்கு? ஜில்லா படத்தை திருட்டு வி.சி.டி.யில் மட்டும் பாருங்க என்கிறாரே…என்று விழாவுக்கு வந்தவர்கள் மண்டையைப் பிய்த்துக்கொள்ளாத குறையாக குழம்பிப்போனார்கள்.

உடனே சுதாரித்துக் கொண்ட ஜீவா, ”தப்பா சொல்லிட்டேனா…ஸாரி…ஸாரி..” என்றவர் மீண்டும் தெளிவாக ‘அதையேதான்’ சொன்னார்…

”ரசிகர்கள் அனைவரும் ‘ஜில்லா’ படத்தை தியேட்டரில் பார்க்காமல் திருட்டு வி.சி.டி.யில் மட்டும் பாருங்க..!” என்று சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார் ஜீவா.

ஜில்லா படத்தை திருட்டு வி.சி.டி.யில் பார்க்காமல் தியேட்டரில் மட்டும் பாருங்க என்று சொல்லாமல் உல்டாவாக பேசுகிறாரே….

ஆமா.. ஜீவாவுக்கு என்னாச்சு?

பிறந்த நாள் என்பதால் முந்தைய நாள் தண்ணிப்பார்ட்டி நடந்திருக்கிறது.

சாதாரணமாகவே ஒரு ஃபுல் பாட்டிலை காலி பண்ணும் ஜீவா, பிறந்தநாள் என்பதால் மேலும் அதிகமாக சரக்கடித்து மட்டையாகி இருக்கிறார்.

போதை தெளியாமல் காலையில் கவுந்தடித்து படுத்திருந்தவரை நலத்திட்ட நாடகத்துக்காக எழுப்பி கூட்டி வந்திருக்கின்றனர்.

அதனால்தான் ஜில்லா படத்தை திருட்டு வி.சி.டி.யில் மட்டும் பாருங்க என்று உளறிக்கொட்டி இருக்கிறார் ஜீவா.

Tags: , ,

Leave a Reply