தேர்தல் நெருங்கும் நேரங்களில் அரசியல் கட்சிகளின் தலைமை கழங்களில் கூட்டம் அலைமோதும்.
கட்சிமாறிகளில் தொடங்கி கவர்ச்சி நடிகைகள் வரை அரசியல் கட்சிகளில் சேர்வதற்கு அடித்துப்பிடித்து ஓடி வருவார்கள்.
அப்படி வரும் கவர்ச்சி நடிகைகளுக்கு சீட் கொடுத்து அவர்களை எம்.எல்.ஏ., எம்.பி.யாக்கி அழகு பார்க்கும் ‘கழகங்களும்’ தமிழ்நாட்டில் ஏராளம் உள்ளன.
அதனாலோ என்னவோ…. மார்க்கெட் போன கவர்ச்சி நடிகைகள் எல்லாம் அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
அப்படி சமீபத்தில் அரசியல் ஆசை ஏற்பட்டு கட்சித்தலைவர்களுக்கு தூதுவிட்டுக் கொண்டிருப்பவர் நமிதா.
தன் குண்டு உடம்பை வைத்துக் கொண்டு இனி சினிமாவில் குப்பைக் கொட்ட முடியாது என்பதைப் புரிந்து கொண்ட நமிதா, அடுத்த கட்டமாக அரசியலில் நுழைந்து, ‘மச்சான் டயலாக்’ பேசியே மக்களவை உறுப்பினராகிவிடலாம் என்று நினைக்கிறார். அதுதான் இப்போதைக்கு நமிதாவின் கனவு.
தன் கனவை நனவாக்க முதல் கட்டமாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு தூதுவிட்டிருக்கிறார்.
‘எங்கள் அண்ணா’ படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருக்கிறார் நமிதா.
அப்படத்தின் அவுட்டோர் படப்பிடிப்பின்போது தன்னோடு ‘அன்பாக’ இருந்தவர்தான் விஜயகாந்த், அதனால் தன்னை கட்சியில் சேர்த்துக் கொண்டு உடனே எம்.பி. சீட்டும் தருவார் என்ற குருட்டு நம்பிக்கையில் தனக்கு நெருக்கமான நபர் மூலம் விஜயகாந்தை நேரில் சந்திக்க முயற்சி செய்திருக்கிறார்.
எதற்காக நமிதா தன்னை சந்திக்க விரும்புகிறார் என்பதை கேட்டு தெரிந்து கொண்ட விஜயகாந்த், தன் கட்சி அலுவலகம் உள்ள கோயம்பேடு ஏரியாவுக்கு காய்கறி வாங்கக் கூட வரக் கூடாது என்று கறாராக சொல்லி அனுப்பி இருக்கிறார்.
மரியாதைக்குக் கூட தன்னை சந்திக்க விரும்பாமல் விரட்டியடித்த விஜயகாந்த் மீது கடுப்பில் இருக்கும் நமிதா, அடுத்த முயற்சியாக இன்னொரு கழகத்தை நோக்கி காய் நகர்த்தி வருகிறார் என்பது கடைசியாக கிடைத்த தகவல்…!
















