அனுமதி பெறாமல் சினிமா திரையிட்டால் நடவடிக்கை: அமெரிக்க தூதரகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை

devyani_summonபுதுடில்லி: ‘அரசின் அனுமதியின்றி, இனி, அமெரிக்க தூதரகத்தில், சினிமா படங்கள் திரையிடக் கூடாது. அப்படி மீறி திரையிட்டால், படச்சுருள்கள் பறிமுதல் செய்யப்படும்’ என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் அவமரியாதை:

அமெரிக்காவின், நியூயார்க்கில், இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிய, தேவயானி என்ற பெண் அதிகாரியை, ‘விசா’ மோசடியில் ஈடுபட்டதாக கூறி, அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவரின் உடைகளை களைந்து, சோதனையிட்டும், அவமதித்தனர். இதற்கு, மத்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் செயல்படும் அமெரிக்க தூதரக அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கான, சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்பில், விரிசல் விழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு, அடுத்த அதிரடியை துவக்கி உள்ளது. மத்திய அரசு சார்பில், அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப் பட்டுள்ள, நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அமெரிக்க தூதரக அலுவலகத்தில், அரசின் அனுமதியின்றி, சினிமாக்கள் திரையிடப்படுவதாகவும், இதில், குறிப்பிட்ட சிலர் மட்டும், பார்வையாளர்களாக அழைக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது.இந்தியாவில், சினிமா படங்களை திரையிட, அரசிடம், முன் அனுமதி பெற வேண்டும். எனவே, இனி, அமெரிக்க தூதரகத்தில் திரையிடப்படும் சினிமாக்களுக்கு, முறையாக, அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

21ம் தேதியிலிருந்து…:

இல்லையெனில், வரும், 21ம் தேதியிலிருந்து, அனுமதி பெறாமல் திரையிடப்படும் திரைப்படங்களின், படச்சுருள்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு, அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply