பிரதமர் டி.எம்.ஜயரட்ண நாட்டின் அனைத்து பெளத்த குருமாரிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் எனப் பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.
பிரதமர் செயலகத்தில் இருந்து வந்த கடிதம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவுடன் ஏற்பட்ட முரண்பாட்டைத் தீர்க்கும் வகையில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
போதைவஸ்து அடங்கிய கொள்கலனை மீட்பதற்கு பிரதமரின் செயலாளர் ஊடாக கடிதம் ஒன்று சுங்கப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில், இரு தரப்பினருக்கும் இடையில் வாக்கு வாதங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு இந்தச் சந்திப்பு வழி சமைத்துக் கொடுத்தது – என்றார் ஞானசாரதேரர்.
















