சொந்த நலனுக்காகவே ஈழத் தமிழர் மீது அக்கறை; தமிழக அரசியல்வாதிகளை சாடுகின்றார் நாச்சியப்பன்

sudarsana-nachiappanஇலங்கைப் பிரச்சினையைத் தமிழக அரசியல்வாதிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் இந்திய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இலங்கைப் பிரச்சினையைத் தமிழக அரசியல்வாதிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தமது சொந்த அரசியல் லாபத்துக்காகவே அதனைப் பயன்படுத்துகின்றனர். இந்திய அரசு இலங்கையில் உள்ள தமிழகர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்தநிலையில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு அக்கறை இல்லாது செயற்படுகின்றது என்று கூறுவது முறையாகாது. தமிழக அரசியல்வாதிகள் தமது சொந்த நலனுக்கான இலங்கைப் பிரச்சினையைப் பயன்படுத்துவதை நிறுத்தி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply