மேல் மற்றும் தென்மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து தீவிரமாகப் பரிசீலனை செய்யவும், தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை இவ்வாரம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக கூடவுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 9ஆம், 10ஆம், 11ஆம் திகதிகளில்சபை கூடும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற இவ்வருடத்துக்கான முதலாவது தலைமைத்துவ சபைக் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைமைத்துவ சபைக் கூட்டம் குறித்து கபீர் ஹாசிம் கருத்து வெளியிடுகையில்,
அண்மையில் அரசுப்பக்கம் தாவிய கட்சியின் தென்மாகாணசபை உறுப்பினர் கிஷாந்த புஷ்பகுமாரவின் கட்சி உறுப்புரிமையை நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நடைபெறவுள்ள மேல், தென்மாகாணசபைத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக எதிர்வரும் 9ஆம், 10ஆம், 11 ஆம் திகதிகளில் தலைமைத்துவ சபை தொடர்ச்சியாகக் கூடவுள்ளது. இதன் போது மேற்படி இரு மாகாண சபைத் தேர்தல்களிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
















