புத்தரின் படத்துடன் இறைச்சிக் கடை கலண்டர்!

buddha-calanderபுத்தரின் உருவப் படத்தைப் பயன்படுத்தி கலண்டர் அச்சடித்த இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொனராகல பிரதேசத்தில் பன்றி, கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனையாளர் ஒருவர் 2014ம் ஆண்டுக்கான கலண்டர் அச்சிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

தலதா மாளிகை மற்றும் கௌதம புத்தரின் உருவப்படங்கள் இந்தக் கலண்டர்களில் காணப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு கலண்டர் வழங்கிய கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கலண்டர்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கலண்டர் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்த இறைச்சிக்கடை உரிமையாளர் ஓர் பௌத்தர் எனவும், அவரது மனைவி வேறு மதத்தைச் சார்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply