இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, யுத்தக் குற்றச் செயல் குறித்த அமெரிக்க விசேட பிரதிநிதி ஸ்டீவன் ரெப் நாளை வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
வடக்கில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சந்திப்புக்களை நடாத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படகிறது.
ரெப் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம், எதிர்க்கட்சி, சிவில் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்ற உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















