அரசியல்வாதிகள் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோருகின்றனர் – கீதா குமாரசிங்க

geetha_kumarasingheதற்போது பெண்கள் தமக்கு தேவையான ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொள்ள பாலியல் ரீதியான இலஞ்சத்தை கொடுக்க நேர்ந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெந்தர – எல்பிட்டிய அமைப்பாளரும் நடிகையுமான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏதேனும் ஒரு காரியத்தை செய்து கொள்வதற்காக பெண்கள் பாலியல் ரீதியான இலஞ்சத்தை கொடுக்க நேர்ந்துள்ளது. இதனால் பெண்கள் செய்வதறியாதவர்களாக மாறியுள்ளனர்.

பிரதேச சபை அரசியல்வாதிகளினால் பெண்கள் சித்திவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு சித்திரவதைகளுக்கு ஆளான எத்தனை பெண்கள் இன்றுள்ளனர் என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் பிரதேச அரசியவாதிகளால் பெண்களுக்கு பல கொடுமைகள் நேர்கின்றன. வன்முறையாளர்களான பிரதேச அரசியவாதிகளுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும்.பிரச்சினைகள் இருந்தால் பெண்கள் அமைதியாக இருந்து விடக் கூடாது என்று சுட்டிக்காட்டினார்.

Tags: , ,

Leave a Reply