கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்னால் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
அமெரிக்காவின் போர் குற்றவிசாரணைக்குப் பொறுப்பான தூதுவர் ஸ்டீபன் ஜெ ரெப் இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை விடயத்தில் அமெரிக்காவின் தலையீடு மற்றும் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சி ஆகிய செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர்.
















