“பெண்கள் பள்ளி வாசல்களில் தொழுகை நடாத்த கூடாது என குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை”

இந்திய பள்ளிவாசல்களில் முஸ்லிம் பெண்களை அனுமதிக்கக் கோரிய மனுவை கேரள உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அகில இந்திய இந்து மகா சபையின் கேரள மாநிலத் தலைவர் தேத்தாத்யே சாய் ஸ்வரூப் நாத்,

“பெண்களை வயது பாகுபாடின்றி ஐப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அதே போல பள்ளிவாசல்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என சட்டம் இயற்றுமாறு மத்திய அரசிற்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

பள்ளிவாசலுக்குள் நுழையவும் தொழுகை நடாத்தவும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் தனிநபர் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறுவதாகும்.

புனித தலமான மக்காவில் கூட பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

அதே சமயம் சமூக விரோதிகளும் அந்த உடையை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று” மனுத்தாக்கல் செய்திருந்தார்

குறித்த மனு விசாரணை உச்ச நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்த போது,

“பெண்களை பள்ளிவாசல்களில் அனுமதிப்பதில்லை என்ற முடிவால் பாதிக்கப்பட்ட நபராக மனுதாரர் இல்லை, அவரது உரிமைகளும் பாதிக்கப்படவில்லை, ஆகவே மனு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று கூறி நீதிபதி குழு நிராகரித்தது.

இதே வேளை கேரளாவிலுள்ள என்.ஐ.எஸ்.ஏ என்ற முஸ்லிம் பெண்கள் அமைப்பானது முஸ்லிம் பெண்கள் நாடெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதி கோரி மாத்திரமன்றி முஸ்லிம் பெண்களை இமாம் பதவியில் நியமிக்குமாறு உத்தரவிட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பாக என்.ஐ.எஸ்.ஏ என்ற அமைப்பின் தலைவி வி.பி.சுஹ்ரா,

“பெண்கள் பள்ளி வாசல்களில் தொழுகை நடாத்த கூடாது என குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை.

முஹம்மது நபியே தனது மனைவியை பள்ளிவாசலுக்குள் அனுமதித்தவர் தான் எனவே முஹம்மது நபியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இஸ்லாம் மதத்தில் எத்தனையோ பெண் மத அறிஞர்கள் இருந்தும் அவர்கள் இமாமாக நியமிக்கப்படுவதில்லை. இப் பழக்கமும் மாற்றப்பட வேண்டும்

இவ் விடயம் தொடர்பாக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுப்பது குறித்து வழக்கறிஞருடன் ஆலேசானை நடாத்தி வருகிறோம். விரைவில் மனு தாக்கல் செய்வோம்.” எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!