பங்­க­ளா­தேஷில் இந்து ஆலயத்திற்கு தீ வைப்பு

hindu-templeமத்­திய பங்­க­ளா­தேஷில் புதன்­கி­ழமை இந்து ஆல­ய­மொன்று தாக்கப்பட்டு தீ வைக்­கப்­பட்­டுள்­ளது.

நெட்­ர­கொனா மாவட்­டத்­தி­லுள்ள காளி கோயிலின் ஒரு பகு­தியே இனந்­தெ­ரி­யாத ஆயு­த­தா­ரி­களால் தாக்­கப்­பட்டு தீ வைக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து உள்­ளூர்­வா­சிகள் சுமார் 45 நிமி­டங்கள் போராடி தீயை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­துள்­ளனர்.

பங்­க­ளா­தே­ஷி­லுள்ள சிறு­பான்மை சமூ­கங்கள் மீது அண்­மையில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களில் தொடர்­பு­பட்­ட­வர்கள் அனை­வ­ரையும் கைதுசெய்து சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தாக அந்­நாட்டுப் பிர­தமர் ஷெய்க் ஹஸீனா உறு­தி­ய­ளித்­த­தற்கு ஒரு நாள் கழித்தே இந்தத் தாக்­குதல் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த 5 ஆம் திகதி அங்கு இடம்­பெற்ற பொதுத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பைத் தொடர்ந்து ரஜ்­ஷஹி, டினஜ்பூர், தகுர்­ககோன், லல்­மோ­னிர்ஹட் மற்றும் ஜெஸோர் உள்­ள­டங்­க­லான பல மாவட்­டங்­களில் இந்­துக்­க­ளது வீடுகள் மற்றும் வர்த்­த­கங்­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.

இந்­நி­லையில் அந்­நாட்டு பொலிஸார் பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் இடம்­பெற்ற நாச வேலை­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டில் வட பொக்ரா மாவட்­டத்தைச் சேர்ந்த ஜமாத் – ஈ – இஸ்­லாமி அமைப்பின் தலைவர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

அவருடன் அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் 11 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: ,

Leave a Reply