காட்டமான அறிக்கையை சமர்ப்பிப்பார் ஸ்ரீபன் ராப்

StephenRappஇலங்கைக்கு ஐந்து நாள் பயணமாக வந்திருந்த அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் நேற்று அமெரிக்கா திரும்பியுள்ளதாகவும், தனது இலங்கைப் பயணம் தொடர்பில் அவர் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் காட்டமான அறிக்கையைச் சமர்ப்பிப்பார் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் சபையின் அமர்வு நடைபெறவுள்ளது. இந்த அமர்வின் போது இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணையைக் கொண்டுவரும் நடவடிக் கைகளில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்காக இது தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் நோக்குடன், அமெரிக்காவின் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் இலங்கைக்கு வந்திருந்தார். இவர் தனது இலங்கைப் பயணத்தின் போது வடக்குக்கும் குறிப்பாக இறுதிப் போர் இடம்பெற்ற புதுமாத்தளன் பகுதிகளுக்கும் சென்றிருந்தார்.

இதன்போது இரணைப் பாலை. சென். அன்ரனீஸ் மைதா னத்தைப் பார்வையிட்ட அவர், அங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல் லப்பட்டனர் என்று டுவிட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட் டிருந்தார்.

எதிர்ப்பு
மேற்படி ருவிட்டர் கருத்து தொடர்பில் இலங்கை அரசு கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீபன் ராப்பைச் சந்தித்த வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம ஆகிய இருவரும் நேரடியாகத் தமது எதிர்ப்பை ராப்பிடம் வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக ஸ்ரீபன் ராப்பிடம் விளக்கம் கோரியதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளபோதும் ராப்பின் விளக்கம் என்ன என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அறிக்கை
இலங்கைப் பயணம் தொடர் பில் ராப், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அறிக்கை சமர்ப்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த அறிக்கை மிகக் காட்டமானதாக அமையும் என்றும் தெரியவருகிறது.

Tags: ,

Leave a Reply