ரஷ்யாவில் உள்ள, சிபேரியன் சுரங்க பகுதியில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அங்கு, மல்யுத்தப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியை காண குடிபோதையில் வந்த இரண்டு பேர், மல்யுத்த போட்டியாளர்கள் மீது பந்தயம் கட்டினர். இதில், யார் தோல்வி அடைகின்றனரோ அவர்கள், தங்களின் இடதுபுற காதை அறுத்துக் கொள்ள வேண்டும் என்பது பந்தயம்.
இதையடுத்து, முதல் சுற்றில் ஒருவரது போட்டியாளரும், இரண்டாம் சுற்றில் மற்றொருவரின் போட்டியாளரும் வெற்றி பெற்றனர். இதனால், பந்தயத்தின் நிபந்தனைபடி, இரண்டு போட்டியாளர்களும் ஒவ்வொரு சுற்றில் வெற்றியும், தோல்வியும் அடைந்ததால், பந்தயம் கட்டிய இருவரும் அவர்களின் இடதுபுற காதை அறுத்துக் கொண்டனர்.
போதை தெளிந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
















