தெற்கில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல்

monk2தென் மாகாணத்தில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கல்வாரி தேவாலயம் மற்றும் அசம்பளி ஒப் கோட் தேவாலயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிறு ஆராதணைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உரிய அனுமதியின்றி தேவாலயம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்து பௌத்த பிக்குகள் அடங்கிய கும்பலொன்று தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் நாளைய தினம் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் குறித்த இரண்டு தேவாலயங்கள் கடுமையான சேதமடைந்துள்ளன.

அண்மைக்காலமாக தெற்கின் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply