62 வயது பாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்

sexual-abuse10இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 62 வயது மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரேதச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள டோம்ரா கிராமத்தைச் சேர்ந்த 62வயது மூதாட்டி ஒருவர் 17 வயது சிறுவன் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார்.

ராஹத்காவ்ன் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மூதாட்டி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

எங்கள் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான். அதனால் அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார்17 வயது சிறுவனை கைது செய்தனர்.

Tags: , ,

Leave a Reply