தனிமை விரும்பியான தல அஜித்தை அடியோடு மாற்றிய ஆர்யா!

ajith-aryaதொழில் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக இருப்பவர் அஜித்.

அதனாலேயே சினிமா விழாக்களுக்கு மட்டுமின்றி அரசியல் கட்சித்தலைவர்களுக்கு ஆயில் அடிக்கும் விழாக்களுக்கும் கூட அஜித் வரமாட்டார்.

சினிமா பர்சனாலிட்டிகளிடமும் அதிக நெருக்கத்தைக் காட்டாமல் தள்ளியே இருப்பதுதான் அஜித்தின் குணம்.

அதிகபட்சம் நேரில் சந்திக்கும்போது ஒரு ஹலோ..ஹாய் சொல்வார்.

அவ்வளவுதான் அஜித்தின் சினிமா சினேகம்.

அப்பேற்பட்ட அஜித்திடம் சமீபகாலமாக மாற்றம் தெரிகிறது.

தொழில் ரீதியாக அறிமுகமானவர்களிடம் நட்பு பாராட்டத் தொடங்கி இருக்கிறார்.

அப்படி அஜித் அண்மையில் அதிகமாக அன்பு செலுத்துவது ஆர்யா மீது.

விளையாட்டுப்பையனான ஆர்யா என்ன சொன்னாலும் அஜித் தட்ட மாட்டார் என்கிற அளவுக்கு அஜித்-ஆர்யா நட்பு படு ஸ்ட்ராங்காக இருக்கிறது.

அஜித்துடனான இந்த நெருக்கமான நட்பைப் பயன்படுத்தி ராஜாராணி பட இயக்குநர் அட்லீ, அழகுராஜா பட இயக்குநர் ராஜேஷ் எம். ஆகியோருக்கு அஜித்திடம் சிபாரிசு செய்து கால்ஷீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஆர்யா.

நட்பை பயன்படுத்தி நண்பர்களுக்கு கால்ஷீட் வாங்கிக் கொடுப்பதில் தப்பில்லை..கடன் கேட்டால்தான் தப்பு!

Tags: ,

Leave a Reply