லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜகத் பாலபட்டபெந்திக்கு எதிராக குற்றப் பிரேரணை முன்வைக்க ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. ஆணையாளர், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் கடந்த முதலாம் திகதி ஜே.வி.பி. முறைப்பாடு ஒன்றை செய்திருந்தது.
இந்த முறைப்பாடு குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் பாலபட்டபெந்தியைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஜே.வி.பி. கோரியுள்ளது.
ஆணையாளருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர அரசமைப்பில் இடம் உள்ளது என்று ஜே.வி.பி.பரப்புரைச் செயலர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாலபட்டபெந்திக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றப் பிரேரணை சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
எனவே அதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
















