கொடுக்கல் வாங்கலில் கோர்ட் உத்தரவு…! கௌதம் வாசுதேவ் மேனன் கைதாவாரா?

vasudev-menanஒரு கலைஞன் வியாபாரியாகும்போது, கலைஞன் தோற்றுப்போகிறான் – என்பது பிரபலமான வாசகம்!

இதையே சற்றே உல்ட்டா பண்ணி, ‘ஒரு கலைஞன் வியாபாரியாகும்போது, கலைஞன் ஜெயிலுக்குப்போகிறான்’ என்று சொல்லலாம் போலிருக்கிறது.

இப்படி சொல்வது இன்றைய சூழலில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்குப் பொருந்தினாலும் ஆச்சர்யமில்லை.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் என்ற படநிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகியோரிடமிருந்து கூட்டாக படம் தயாரிக்க சில வருடங்களுக்கு முன் பெரும்தொகையை வாங்கினாராம் கௌதம் வாசுதேவ் மேனன்.

வாக்குக் கொடுத்தபடி அவர் நடக்கவில்லை. எனவே அவர் மீது எல்ரெட் குமார், ஜெயராமன் இருவரும் மோசடி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் கௌதம் வாசுதேவ் மேனனை விசாரிக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

அதன்படி, கௌதம் வாசுதேவ் மேனனை காவல்துறை விசாரிக்கவில்லை என்றும், தங்களின் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன் எல்ரெட் குமார், ஜெயராமன் இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

சில தினங்களுக்கு முன், அவர்களது மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்தில் கௌதம் வாசுதேவ் மேனனை விசாரணை செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் சுறுசுறுப்பான காவல்துறை கௌதம் வாசுதேவ் மேனன் மீதான புகாரை தூசுத் தட்டி எடுத்திருக்கிறது.

விசாரனைக்குப் பின் கௌதம் வாசுதேவ் மேனன் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

Tags: 

Leave a Reply