சக மாணவிக்கு முத்தம் கொடுத்த 6 வயது சிறுவன் பள்ளியிலிருந்து நீக்கம்

jeldonஅமெரிக்கா நாட்டில் 6 வயது நிறைந்த பள்ளி மாணவன் தனது சக மாணவியை முத்தமிட்டதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கொலராடோ நகரில் கேனன் என்ற பகுதியில் அமைந்த பள்ளி கூடம் ஒன்றில் படித்து வரும் சிறுவன் ஹன்டர் யெல்டன் (வயது 6).

இவர் சம்பவம் குறித்து தொலைக்காட்சிக்கு அளித்த தகவலின்படி, தன்னுடன் படிக்கும் சக மாணவியின் கையில் மெதுவாக குனிந்து முத்தமிட்டுள்ளார். இது தான் நடந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சக மாணவியின் மீது தான் அன்பு கொண்டிருந்ததாகவும், அந்த மாணவியும் பதிலுக்கு தன் மீது அன்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த மாணவன் தற்போது பள்ளி நிர்வாகத்தின் தண்டனைக்கு உள்ளானதால் வருத்தத்துடன் உள்ளார். மேலும் அந்த சிறுவன், தனது தாய் சாண்டர்சிடம் செக்ஸ் என்றால் என்ன? என்று கேள்வி கேட்கிறார்.

6 வயதே ஆன சிறுவனுக்கு பள்ளி இடைநீக்கம் அதிகப்படியான தண்டனை ஆகும் என சாண்டர்ஸ் கூறியுள்ளார். எனினும், மாவட்ட கல்வி அதிகாரி ராபின் கூல்டி செய்தியாளர்களிடம் கூறும்போது,

விரும்பத்தகாத வகையில் தொடுவதற்கு எதிரான கொள்கை அடிப்படையில் மாணவன் பள்ளியில் இருந்து செய்யப்பட்டுள்ளார். அவரது நடத்தையையே நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். வழக்கமாக மாணவன் தனது செய்கையை நிறுத்தவே நாங்கள் முயற்சி செய்வோம்.

ஆனால் அது தொடர்ந்து நடந்தால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அது சில நேரங்களில் சஸ்பெண்டு என்ற நடவடிக்கைக்கும் செல்ல நேரிடுகிறது என்று அவர் கூறினார்.

Tags: , ,

Leave a Reply