இந்த ஆண்டில் முக்கியமான தேர்தல் நடைபெறும் – ஐ.தே.க
இந்த ஆண்டில் மிக முக்கியமான தேர்தல் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் பொது அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க உள்ளகத் தகவல்களின் மூலம் பொதுத் தேர்தல் பற்றிய தகவல் கிட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் ஜூன் மாதமளவில் கூட பிரதான தேர்தல் ஒன்று நடைபெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றியீட்டி, ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவதே கட்சியின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீழ் மட்டத்திலிருந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திட நம்பிக்கையுடன் போராடினால் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியும் எனவும், வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியமை இதற்கு சிறந்த உதாரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ‘ஆம், எங்களால் முடியம்’ என்ற நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலில் களமிறங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
















