கனேடியக் குழுவினர் நேற்று யாழ். வருகை

canada-flagயாழ். மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த கனேடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர் எனத் தெரியவருகிறது.

கனேடிய வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் இரு நாள் பயணமாக நேற்றுக் காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தனர்.

முதலில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரை இவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதன் பின்னர் யாழ். நகரில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டுள்ளனர்.

நண்பகலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை இவர்கள் சந்தித்துள்ளனர். யாழ்.மாவட்டத்தின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பிலேயே இவர்கள் அதிகளவு கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: 

Leave a Reply