சூர்யாவின் அடுத்த புதிய மெகா பட்ஜெட் படம் அஞ்சான்.
இதை யூடிவி உடன் மீண்டும் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.
புதிய தோற்றத்தில் புதிய மிடுக்குடன் சூர்யா நாயகனாக நடிக்கும் அஞ்சான் படத்தில் சமந்தா நாயகி.
மற்றும் வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில், பிரமானந்தம் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
என் .லிங்குசாமி எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். இசை யுவன் சங்கர்ராஜா. கலை இயக்கம் ராஜீவன். எடிட்டிங் ஆண்டனி.
‘அஞ்சான்’ படம் பற்றி டிஸ்னி -யூடிவியின் தென் பிராந்திய வணிகம் மற்றும் ஸ்டுடியோஸின் முதன்மை அதிகாரி ஜி.தனஞ்ஜெயனிடம் கேட்டோம்…
“மூன்றாவது முறையாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. ஏற்கெனவே நாங்கள் இணைந்த ‘வேட்டை’ ‘இவன்’ வேற மாதிரி’ இரண்டுமே வசூலில் வெற்றி பெற்றவை. அடுத்த மெகா பட்ஜெட் படமாக ‘அஞ்சான்’ இருக்கும். எங்கள் வெற்றி வரிசையின் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும். ” என்கிறார்.
“இந்தப்படம் பட்ஜெட்டாலும் நட்சத்திரங்களாலும் படப்பிடிப்பு இடங்களாலும் தமிழ்த்திரை இதுவரை காணாத வகையில் இருக்கும். இப்படம் மிகப்பெரிய மாஸ் எண்டர் டெய்னராக இருக்கும் ஆகஸ்ட் 2014 ல் வெளியாகும் இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் லிங்குசாமி .
மும்பையில் முதல் கட்டமாக 35 நாட்கள் நடந்த ‘அஞ்சான்’ படப்பிடிப்பு அண்மையில்தான் முடி வடைந்தது.
அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இம்மாத இறுதியில் புறப்பட உள்ளது படக்குழு.
கோவா பயணப்பட்டு பிறகு மகாராஷ்டிரா செல்கிறது. தொடர்ந்து தமிழ்த்திரை காணாத பல புதிய இடங்களுக்கு செல்லவுள்ளது..
முழுப்படமும் தமிழ்நாடு அல்லாத வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ‘அஞ்சான்’ஒரே நேரத்தில் உருவாகிறது.
















