இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்கத் தூதர்களின் துணைவியர்கள் டெல்லி, மும்பை மற்றும் சென்னையிலுள்ள அமெரிக்க பள்ளிகளில் பணிசெய்யும் விவரங்களை வழங்குமாறு, இந்தியா கோரியுள்ளது.
இந்திய அரசின் தூதரக அதிகாரியாக அமெரிக்காவில் பணியாற்றியவர் தேவயானி கோப்ரகடே. இவர் தனது பணிப்பெண்ணுக்கு ஊதியம் குறைவாக கொடுத்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
இதனால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது அமெரிக்க அரசுக்கு மேலும் சில கெடுபிடிகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய நுழைவு சலுகையை இரத்து செய்த இந்தியா, தற்போது அந்நாட்டு தூதர்களின் துணைவியர்கள் டெல்லி, மும்பை மற்றும் சென்னையிலுள்ள அமெரிக்க பள்ளியில் பணிசெய்யும் விவரங்களை வழங்குமாறு கேட்டுள்ளது.
ஆனால் இதுவரை இத்தகவலை அந்நாட்டு அரசு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளிகளில் பணியாற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகைகளை இரத்து செய்யும் முடிவு காரணமாகவே இவ்விவரம் கேட்கப்படுவதாக அமெரிக்காவிலுள்ள இந்திய தூதர் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு துறை செயலாளரான வில்லியம் பர்ன்சிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















