அமெரிக்க போர்க் குற்ற நிபுணர் ஸ்டீவன் ராப்பின் அறிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஸ்டீவன் ராப், ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்துள்ளார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளது.
மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்கள் மற்றும் புலி ஆதரவாளர்களினால் நாட்டுக்கு எதிராக அளிக்கப்பட்ட போலிச் சாட்சிகளை ராப் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் போர் சூனிய வலயத்தில் படையினர் நடத்திய தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆயர்கள் சுமத்திய குற்றச்சாட்டை போர்க் குற்ற நிபுணர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆகவே ஸ்டீவன் ராப்பின் இந்த ஒருதலைப்பட்சமான தீர்மானங்கள் அரசாங்கத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
















