அரசாங்கம் ஐ.நாவில் தோற்றால் பாரிய பிரச்சினை ஏற்படும்; லக்ஸ்மன் கிரியெல்ல

Lakhsman_Kiriella_UNPகடந்த வருடம் வெலிக்கடை சிறையில் ஏற்பட்ட மோதலில் 90 பேர் கொல்லப்பட்டதாகவும் இது பாரிய மனிதப்படுகொலை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறைகளில் அவசர தேடல் என்ற பெயரிலேயே இராணுவத்தினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெலிக்கடை சிறைக்குள் நுழைய இராணுவத்தினருக்கு நீதிமன்ற ஆணை இருந்திருக்கவில்லை. விலங்கு போடப்பட்டிருந்த கைதிகள் மீதும் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து விசாரிக்க குழுவொன்றை நியமித்ததை தவிர அரசாங்கம் வேறு ஒன்றும் செய்யவில்லை. இதுவரை விசாரணை அறிக்கை வெளியிடப்படவில்லை. அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கே இந்த நிலை என்றால் மற்றையவர்களின் நிலையை நினைத்துப் பார்த்துக்கொள்ள முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ. நா சபையில் அரசாங்கம் இரண்டு தடவை தோற்றது. அடுத்த முறையும் அரசாங்கம் ஐநாவில் தோற்றால் பாரிய பிரச்சினை ஏற்படும். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்காது மேலும் மேலும் பிரச்சினைகளை வளர்க்கவே செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.

1988,1989ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க சர்வதேசத்துடன் பேசி அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் இந்த அரசாங்கத்தால் அதனை செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply