ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்களை நசுக்கும் ஆட்சிக்கு எதிரான “மக்கள் மேடை’ என்ற தொனிப்பொருளில் வெலிகம பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குடும்ப ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். அரசுக்கு எதிராக குரல் எழுப்ப எதிர்க் கட்சிகளுக்கு பலம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். ரணில் விக்கிரமசிங்கவின் உடல் மாத்திரம் தான் எதிர்க்கட்சியில் இருக்கின்றது என்று அவர் கூறினார்.
















