இலங்கைப் படையினருக்கு பிரித்தானியா பயிற்சி அளித்தது?

uk_flagதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை அரச படையினருக்கு பிரி;த்தானியா பயிற்சிகளை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கிரட் டச்சரின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்ட இரகசிய ஆவணமொன்றின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

இலங்கை அரச படையினருக்கு பயிற்சிகளை வழங்க டச்சரின் அரசாங்கம் அனுமதியளித்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் பிரித்தானிய நிறுவனமொன்று இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க வேண்டாம் என இந்திய பிரதமர் இந்திரா காந்தி, டச்சரிடம் கோரியிருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வகட்சி மாநாட்டில் அனைத்து தரப்பினரும் ஒன்றாக கலந்தாலோசித்து காத்திரமான தீர்வினை எட்ட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது,
அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு இராணுவ ரீதியான ஒத்துழைப்பு தீர்வாக அமையாது என இந்திரா காந்தி, பிரித்தானிய பிரதமரிடம் குறிப்பிட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1984ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம், இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கி வருவதாக இந்தியா சந்தேகித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply